eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான்.
விடுதலைப் புலிகளின் ஆளுகையில் ஈழம் இருந்தபோது எப்படி இருந்தது என்பதை விளக்கும் ஒரு அருமையான புகைப்படத்தை அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்டீவன் மெக்கர்ரி வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு சிங்களர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்திட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள் இன்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உயிர்நீத்த மாவீர்களுக்கான பொதுச்சுடர் ஏற்றிய அதேவேளை, கட்சி உறுப்பினர்கள் மற்றும் உயிர்நீத்த மாவீரர்களின் உறவினர்கள் நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இறந்த உறவுகளை நினைவு கூருவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. மாவீரர்களை நினைவு கூருவதால் தற்போதைய நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படும் எனவே, மாவீரர் தினம் எனக் கூறுவது தற்போதைய நிலையில் பொருத்தமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் அனைத்து இடங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போட்டியிடும். புதிய கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து உறுப்பினர்கள் வந்துள்ளமை மெய்சிலிர்க்க வைப்பதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் உயிர்நீத்த சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்துவதில் தவறில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற வடக்கு தெற்கு உரையாடலின் போது- ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மரணித்தவர்களை நினைவு கூருவது ஜனநாயக உரிமை என்றாலும், விடுதலைப் புலிகளின் அமைப்பை நினைவு கூர இடமளிக்கப்படாது, என்று, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கிலும், தெற்கிலும் புத்தர் சிலைகள் அகற்றப்படுவதற்கு எதிராக சிங்கள மக்கள் ஆயுதம் ஏந்தும் நிலை நாட்டில் உருவாகவுள்ளது என்று பொதுபல சேனா எச்சரித்துள்ளது. பொதுபல சேனா ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கிருலப்பனையில் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இனங்களுக்கிடையிலான சுமூக நிலையை குழப்பி மோதல்களை தூண்டும் நோக்கில் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

<< முதல்பக்கம் 1 2 3 4 5 ... 324 325 326 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |