eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
இராணுவக்குடியிருப்பாக வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் மாற்றப்பட்டுவருகின்றது. இதற்கான அறிவிப்பைவிடும் வகையில் வசாவிளான் பாடசாலைக்கு அண்மையில் பலாலி வீதியில் கற்களினால் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்ட பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் உள்ளங்களை பிழையாக ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இளைஞர்களின் உணர்வுகள் முழுவதும் தவறாக ஆற்றுப்படுத்தப்பட்டு விடுமோ என அஞ்சும் நிலை உருவாகியிருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் அனைத்துலக நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா கட்டாயம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.
இராணுவம் மரக்கறிகளை விற்பனை செய்வதால் விவசாயிகள் பாதிப்படைவது தொடர்பில், விரைவில் நல்லதொரு தீர்வை வழங்குவதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்கால குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு உதவப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆயுதம் தாங்கிய இராணுவம் மற்றும் பொலிஸாரின் விசேட பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த உகண்டா நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓடாஸ்கோ ஜீ தலைமையிலான குழுவினர் களநிலைவரங்களை ஆராய்ந்துள்ளனர்.
நாட்டின் இன்றைய சர்வாதிகார போக்குடனான ஆட்சியில் மக்கள் பாரிய துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு செல்லும் அதேவேளை ராஜபக்­ குடும்பத்தினர் அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வருகின்றனர்.
வடமாகாண சபை மாங்குளத்தில் இருப்பதுதான் பொருத்தம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கல்வி வலயத் திற்கு உட்பட்ட சிலாவத்தை றோமன் தமிழ் கலவன் பாடசாலையில் அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி பாடசாலைக் கட்டடத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தை இலக்கு வைத்து சதித்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை அரசைக் கடுமையாகச் சாடுகிறது பிரிட்டன்..
இலங்கை அரசால் இதுவரை நிறுவப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுவின் விசாரணைகளும் சர்வதேச தரத்துக்கு ஏற்புடையதாக இல்லை என்று சாடியுள்ள பிரிட்டன், சர்வதேச தரத்துக்கு ஏற்புடைய உள்ளக விசாரணைகளை இலங்கை ஆரம்பிக்குமானால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

<< முதல்பக்கம் 1 2 3 ... 323 324 325 ... 330 331 332 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |