eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எதிர்வரும் ஜனவரி மாதம் நான்காம் திகதி கனடாவுக்கு பயணமாகவுள்ளார். 16ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள முதலமைச்சர் இரட்டை நகர ஒப்பந்ததம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதோடு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். கனடியத் தமிழ் சமூகத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளனர்.
அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு கருத்துக்களை முன்வைத்த போதிலும் புதிய அரசியல் அமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறுவது ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடாகும் என ஜேவிபி தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் தரவேற்றப்பட்டுள்ள வீடியோவில், ஜனவரிக்குள், தற்போதையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இயற்கையாகவே மரணமடைந்து விடுவார். அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் அஸ்தி தம்மிடம் இருப்பதாக உலகத் தமிழர் வரலாற்று மையம் அல்லது தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உரிமை கோரியிருப்பது தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அத்தகவல் முற்றிலும் பொய்யானது எனவும், அதனை நம்பவேண்டாம் எனவும் தமிழீழ மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் சமாதானப் பொறிமுறைகள் கொலம்பியாவிற்கு பொருத்தமுடையதல்ல என தான் எண்ணுவதாக, அந்நாட்டு ஜனா திபதி ஜூவான் மெனுவல் (Juan Manuel) தெரிவித்துள்ளார். அண்மையில் பார்க் கெரில்லா போராளிகளுடன் சமாதான உடன்படிக்கை ஒன்றில் கொலம்பிய ஜனாதிபதி கைச்சாத்திட்டிருந்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய கடற்படைத் தளபதியின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ள ஊடக அமைப்புக்கள் குறித்த சம்பவத்திற்காக கடற்படை தளபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
தமிழ்ச் சமுதாயம் தமக்காகக் குரல் கொடுத்த ஒரு பலம் மிக்க அரசியற் தலைவரை இழந்து விட்டது என்று வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழக முதல்வரின் மறைவையொட்டி ஆற்றிய இரங்கலுரையில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபை 67 ஆவது அமர்வு வடக்கு மாகாணசபை பேரவைச் செயலக சபா மண்டபத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
முஸ்லிம் மக்களை தத்தமது பொதிகளை தயார் செய்து அரேபிய நாடுகளுக்கு புறப்படுமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்தார்.
சர்வதேச அரங்கில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றம் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை வலுவிழக்கச் செய்யும் என்று அரசாங்கம் கருதினால் அது முற்றிலும் தவறானது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

<< முதல்பக்கம் 1 2 3 ... 4 5 6 ... 327 328 329 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |