eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.
காணாமல் போனோரில் பலர் உயிருடன் இல்லையென்றே தாம் நம்புவதாகவும் காணாமல் போனவர்கள் தொடர்பில் எந்தவொரு தகவலையும் இலங்கையில் தேடமுடியாதென பொலிஸார் அறிவித்துள்ளனர் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ருத்ரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு எந்தநாடும் அங்கீகாரம் வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இயங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அமெரிக்கா கூடஅங்கீகாரம் வழங்கவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே போராடிய மாணவர் இயக்கத்துக்குள் கண்ட அமைப்புகள் புகுந்து போராட்டத்தை கைவிட மறுக்கின்றன என நடிகர் ராகவா லாரன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். வெற்றியை கொண்டாட 500 கிலோ கேக்குடன் வந்த எனக்கு ஏமாற்றம் என்று கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வாகும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்ற உழவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
கனடாவுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்னிடம் கோரவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இம்மாதம் முற்பகுதியில் கனடாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை சில நாட்களில் இலங்கைக்கு கிடைக்கும் என அண்மையில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடிப் பகுதியிலிருந்த இராணுவத்தினர், வெளியேறி வருகின்றனர். யுத்த காலத்தில், வடக்கிலிருந்து தெற்குக்கும் தெற்கிலிருந்து வடக்குக்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த ஓமந்தை சோதனைச்சாவடி, 21 பேருக்குச் சொந்தமான 24 ஏக்கர் காணியைக் கொண்டிருந்தது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருத்தல் பற்றியும், இல்லாமை பற்றியும், தனிமனித தத்துவம் பற்றியும், ஆழமான தரிசனங்களை மேற்கொண்டவர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள். தமிழ்ச் சமூகத்தை சிறைப்பிடித்திருக்கும் சடங்குகளுக்குள்ளும், மூடநம்பிக்கைகளுக்குள்ளும் இறுதிவரை சிக்கிக் கொள்ளாமல் ஒரு புரட்சிகர வாழ்வை வாழ்ந்து மடிந்த பிரம்மஞானி அவர்.

<< முதல்பக்கம் 1 2 3 ... 5 6 7 ... 330 331 332 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |