ஐ.நாவில் இலங்கைக்கு விழுந்த முதல் அடி: நிபுணர் குழுவில் இருந்து தூக்கப்பட்டார் சவேந்திர!
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினரின் சம்பள விவகாரங்கள் சம்பந்தமாக செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் இருந்து தூக்கி எறியப்பட்டு உள்ளார் சவேந்திர சில்வா..
ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவரும் இறுதி யுத்தத்தில் 58 ஆவது படைப் பிரிவின் தளபதியாக கடமையாற்றியவருமான ஜெனரல் சவேந்திர சில்வா.
ஐக்கிய நாடுகள் சபையின் இத்தீர்மானம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
இந்நிபுணர்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பவரும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பிரதிச் செயலாளருமான Louise Frechette சக நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிற்பாடு இத்தீர்மானத்தை அறிவித்து உள்ளார்.
இந்நிபுணர் குழுவில் செயல்படுகின்றமை உசிதமானது அல்ல என்று இவரால் சில்வாவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அச்சுப்பிரதி
பதிவுசெய்யப்பட்டது: 23 Feb 2012 செய்தி மூலம்: tamilcnn