பெப்ரவரி 27: ஜெனீவாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மக்களை அணிதிரளுமாறு அழைப்பு
சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன் விசாரணையை வலியுறுத்தி, ஜெனீவா ஐ.நா முன்றிலில் மக்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சர்வதேச அழுத்தங்களில் இருந்து சிங்கள தேசத்தை காக்க, சிறிலங்கா அரசாங்கத்தின் பின்னால் மக்களை அணிதிரளுமாறு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, நாட்டு மக்கள் திரண்டு வந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடங்குகின்ற நாளான பெப்ரவரி 27ம் கொழும்பைப் பிரதானமாகக் கொண்டு நாட்டின் அனைத்துத் தொகுதிகளிலும் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் இயக்க செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தை மையப்படுத்தி எதிர்ப்பு ஆர்பாட்டங்கள நடாத்த சிங்கள் இனவாத அமைப்புக்கள் தயாராகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுஇவ்வாறிருக்க, சிறிலங்கா தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெப்-27 நீதிக்காய் ஒன்றுபடுவோம் எழுச்சி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாக நா.த.அரசாங்க தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அச்சுப்பிரதி
பதிவுசெய்யப்பட்டது: 23 Feb 2012 செய்தி மூலம்: நாதம் ஊடகசேவை