eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
கூட்டமைப்பிற்கு மாறாக எந்த அமைப்பையும் ஆரம்பிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எனக்கும் அவ் அமைப்பிற்கு எதிரான புதிய அமைப்பு எதனையும் உருவாக்கும் நோக்கம் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் எனக்கும் அவ் அமைப்பிற்கு எதிரான புதிய அமைப்பு எதனையும் உருவாக்கும் நோக்கம் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

அத்தோடு த.தே.கூட்டமைப்பினர் சிறப்பாக செயற்பட வேண்டும் என்பதே தனது விரும் பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

சில அரசியல் குழுக்களுடன் யாழ்நகரில் உள்ள யூரோவில் மண்டபத்தில் கடந்த சனிக் கிழமை நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு உண்மையானதே. ஆனால் அதன் நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாறான ஓர் அமைப்பை உருவாக்குவதல்ல. மிகக் குழப்ப மான நிலையில் உள்ள யாழ்ப்பாணக்கள நிலைபற்றிக் கலந்துரையாடும் நோக்கில் சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன உட் படப் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களின் கூட்டமாகும்.

ஈ.பி.டி.பியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, சிறி ரெலோவைச் சேர்ந்த உதயராசா, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த நான் ஆகிய மூவரும், பத்மநாபா ஈ.பி.ஆர்.எல். எப் ஐச் சேர்ந்த சிறிதரனுடன் இணைந்து ஒரு மாற்று அணியை உருவாக்க எண்ணுகின்றோம் என்ற ஒரு தப்பான அபிப்பிராயம் மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.

உண்மையில் சிறிதரன் என்பவர்தான் அழைப்பை விடுத்தவராகும். இவர் என்னுடன் நீண்ட காலமாக த.தே.கூ வில் இணைந்து செயற்பட்டவராவார். ஏற்கெனவே கூறப்பட்ட தலைவர்களும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், புத்திஜீவிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்தின் கள நிலையைப் பற்றியே இங்கு பேசப்பட்டது. வட மாகாண சபையின் அதிகாரங்கள், பிரதேச சபையின் செயற்பாடு கள், சில பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டமை போன்ற பல விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன.

இச் செயலமர்வில் நல்லாட்சிக்கு வழிவகு க்கக்கூடிய ஆக்கபூர்வமான கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. இச் சபைகளை நடத்துவோருக்கு இக்கண்டனங்கள் மிகப் பிரயோசனமாக இருந்தன.
இக் கூட்டம் கூடியோருக்கு நல்லெண்ணம் இருந்ததேயன்றி தீய நோக்கம் ஏதும் இருக்கவில்லை.

துரதிர்ஷ்டவசமாக அச்சு, மின் ஊடகங்களில் ஒரு பகுதியினர் உள்ளூரி லும் வெளிநாடுகளிலும் என் செயற்பாடுகள் எத்தகைய நன்மை பயக்கக்கூடியவையாக இருந்தாலும் பாராட்டி ஒருவார்த்தை கூடப் பேசாமல் எதிலும் குற்றம் குறை கண்டு கொள்வதையே வழக்கமாகக் கொண்டு செயற்படுகின்றனர். என்னுடைய நற்செயல் களை எல்லாம் இருட்டிப்புச் செய்வதே இவர்க ளின் தொழிலாகி விட்டதை நான் வருத்தத் துடன் கூறவிரும்புகின்றேன்.

இந்தக்கூட்டம் புதிய அமைப்பை உருவா க்குவதற்கன்றி பல்வேறு கட்சிகளைப் பிரதி நிதித்து வப்படுத்தும் கல்விமான்கள், அனு பவம் மிக்கவர்கள் போன்றோரின் கருத்துக் களைப் பரிமாறும் நோக்குடையதேயாகும். எந்த விடயத்திலும் நான் நேர்வழியை நாடு பவனே அன்றிக் குறுக்குவழிகளை எதிலும் கடைப் பிடிப்பவனல்ல மூன்றரை ஆண்டுக ளாக எத்தனை திட்டமிட்ட புறக்கணிப்பு கழுத் தறுப்புக்களை எல்லாம் பொறுத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பைத் தொடர்ந்து கட்டிக்காத்தே வருகிறேன். ஆனால் அங்குள் ளவர்களிலும் பார்க்க என்னிடம் எதுவும் இல் லாது போனாலும் என்னிடம் நாட்டுப் பற்று இனப்பற்று விசுவாசம் அத்தனையும் நிறைய உண்டு.

இன முரண்பாட்டுக்கான தீர்வுகாணும் விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் ஏகபோக உரிமையானது அல்ல. அதில் அக்கறையுடைய எவரும் பங்களிப்பை நேர்மையாகச் செய்வதில் தவறில்லை.

எது எப்படி இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாறாக எந்த அமைப்பையும் உருவாக்கும் எண்ணம் எனக்கு இல்லை. தொடர்ந்து நான் த.தே.கூ விலேயே இருந்து செயற்படுகிறேன் என ஆனந்தசங்கரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 17 Jan 2014 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: வலம்புரி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |