eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
ஆவா குழுவைச் சேர்ந்தோரால் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்
யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக நின்ற யாழ் ஊடகவியலாளர்கள் ஐவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார், பொதுமக்கள் என பலர் முன்னிலையில் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.

இணுவில் ஆவா குழு தொடர்பான செய்தி சேகரிப்பிற்கு யாழ். நீதிமன்றம் சென்ற ஊடகவியலாளர்களுக்கே மேற்படி கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆவா குழு தொடர்பான செய்தியினை ஏன் வெளியிட்டீர்கள் என கூறியே ஊடகவியலாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இணுவில் சிவகாமியம்மன் கோவிலடியினை சேர்ந்த ஆவா என்றழைக்கப்படும் இளைஞர் குழு தொடர்பான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் எடுத்துக் கொள்ளப் பட்டது.
வழக்கு விசாரணையின் முடிவில் சந்தேக நபர்கள் அனைவரும் நீதி மன்றுக்கு வெளியே அழைத்து வரப்பட்டு சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது அதனை சில ஊடகவியளார்கள் படம் பிடித்துள்ளனர்.

இவை நடை பெற்று ஒரு சில நிமிடங்களிற்குள் அங்குவந்த 20 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் 5 ஊடகவியலாளர்களினையும் மிரட்டியதோடு ஒரு சிலரினை தாக்கவும் முயற்சித்துள்ளனர்.

எனினும் இரு ஊடகவியலாளர்கள் அச்சம் காரணமாக நீதிமன்ற கட்டட வளாகத்திற்குள் ஓடி ஒளித்துக் கொண்டனர்.

இதன் பின்னர் அங்கு நின்ற இளைஞர்களும் ஆவா குழுவின் உறவினர்களில் ஒரு சிலரும் ஊடகவியலாளர்களினை நோக்கி உள்ளே இருப்பவர்கள் வெளியில் வரட்டும் உங்கள் எல்லாருக்கும் வெட்டு இருக்கு என மிரட்டியுள்ளனர்.

நீதி மன்றிற்கு முன்னாள் இச்சம்பவம் நடைபெற்றதனால் அங்கு பெரும் களேபரம் நடந்தமை போன்று இருந்தது.

இதனையடுத்து அங்கு வந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடக வியலாளர்களினை அச்சுறுத்தியவர்களினை தனது கைத் தொலைபேசி மூலம் படம் பிடித்ததோடு ஊடகவியலாளர்களினை பாதுகாப்பாக யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் ஐவரும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையுடன் தற்பாதுகாப்பு கோரி முறைபாடு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற வலம்புரி, உதயன் மற்றும் தினக் குரல் ஆகிய பத்திரிகைகளினை சேர்ந்தோர், இலத்திரனியல் ஊடகமான உதயன் ஒன்லைனை சேர்ந்த பெண் ஊடகவியலாளரும், டான் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவருக்குமே இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தாம் முழு மூச்சுடன் மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என தெரிவித்தனர்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 18 Jan 2014 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: வலம்புரி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |