eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
இலங்கைக்கு எதிரான யோசனையை நிறைவேற்றுவதில் அமெரிக்கா விடாப்பிடி
ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 28-ம் திகதி அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் யோசனை கட்டாயமாக வெற்றிபெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அரசு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் யோசனை தொடர்பான வாக்கெடுப்பு மனித உரிமை பேரவையில் 28-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், 29-ம் திகதி இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

ஜெனீவாவில் ஏற்பட்ட தோல்வியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் 29-ம் திகதி தேர்தலை நடத்துவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான யோசனை எதிர்வரும் மார்ச் 28-ம் திகதி ஜெனீவா மனித உரிமை பேரவையில் கட்டாயம் தாக்கல் செய்யப்படும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கொழும்பில் உள்ள தனது தூதரகத்தின் ஊடாக வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஙக்கு ஏற்கெனவே அறிவித்து விட்டது.

எதிர்வரும் மார்ச் 8-ம் திகதி நடத்தப்படவிருந்த மாகாண சபைத் தேர்தல் 29-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை யும் அமெரிக்காவின் இந்த அறிப்பே காரணம் என கூறப்படுகிறது.

இதனிடையே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக யோசனையை கொண்டு வருவதென திட்ட வட்டமான முடிவில் இருப்பதால், இலங்கை வரும் நிஷா தேசாய், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத் திக் கொடுக்கப் போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இவ்வாறு பனிப் போர் ஆரம்பித் துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள அரசாங்கம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

எது எப்படி இருந்த போதிலும் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் யோசனை நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்துவது அல்லது பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது என்ற முயற்சிகளில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஈடுபட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 18 Jan 2014 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: வலம்புரி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |