eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
அரசுடன் இருக்கும் பலருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்!
அனந்திக்கு அல்ல என்கிறார் மனோ...
பிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்தார் என்று குற்றம்சாட்டி மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வு அளிக்கும் யோசனையை முன்வைத்த நபருக்கு அங்கொடை வைத்தியசாலையில் மனநோய் மருத்துவம் செய்விக்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தெகிவளை ஸ்டபர்ட் ஒழுங்கை தோட்டத்தில் நேற்று முற்பகல் நடை பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோதே ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
இது சர்வதேச கண்டனத்தை தேடி கேட்டு வாங்கி பெறும் முட்டாள் யோசனையாகும். ஜனநாயக நடை முறைகள் பற்றிய எந்தவித அறிவும் இல்லாத நபர்களை ஆலோசனை சொல்ல பக்கத்தில் வைத்து கொண்டால் அவர்கள் இப்படித்தான் யோசனை சொல்வார்கள்.

மேல்மாகாணத்தில் தேர்தல் நடத்த போகின்றீர்கள். வடக்கில் நடத்திய தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு மக்கள் பிரதிநிதியை கைது செய்வதாக பயமுறுத்துகிறீர்கள். இத்த கைய ஆலோசகர்கள் மூலமாகத்தான் அரசாங்கமும், நாடும் சர்வதேச ஆபத்து சிக் கலில் தேடிபோய் விழுகின்றன. இதை தான் சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வது என்பார்கள்.

நமது கட்சி நாட்டு பிரிவினையை எதிர்க்கிறது. பிரிவினை உணர்வுகளை தூண்டும் விதத்தில் பரப்புரை செய்யப் படுவதை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். ஆனால் யார் பிரிவினைவாதி என்ற கேள்வி இங்கே எழுகிறது.

காணாமற் போன தனது கணவனையும், மனைவியையும், பிள்ளைகளையும் தேடி அலைபவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. இந்த நாட்டில் மக்களை இன, மத ரீதியாக பிரித்து ஆள நினைப்பவர்கள் தான் பிரிவினைவாதிகள் ஆகும். சகோதர இனத்தின் உரிமைகளை பறித்து எடுப்பவர்களும், சகோதர மதத்து மக்களின் வழிபாட்டு உரி மைகளையும் மறுப்பவர்களும் தான் பிரிவினைவாதிகள்.

முன்னாள் புலிகள் இயக்கத்து நபர்கள் என்று பார்த்தாலும் கூட, அவர்களில் மிகப் பிரபலமானவர்கள் இன்று அரசாங்கத்துக்குள்ளே தான் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் புனர்வாழ்வு வழங்குங்கள். ஆனால், மக்களால் தெரிவு செய்ய ப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை கைது செய்து புனர்வாழ்வு வழங்க வேண்டி வரும் என்று கூறி, சர்வதேச கண்டனத்துக்கு உள்ளாகி, மிச்சம் இருக்கும் நாட்டின் பெயரையும் நாசமாக்காதீர்கள்.

இந்த உண்மையை நான் தமிழ் மொழியிலும் கூறுகிறேன். அதையே சிங்கள மொழியிலும் கூறுகிறேன். அதையே ஆங்கில மொழியிலும் கூறுகிறேன். இதை இங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டும் அல்ல, நல்லெண்ணம் கொண்ட சிங்கள பௌத்த மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 18 Jan 2014 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: வலம்புரி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |