வடக்கில் இன்றும் ஊடக அடக்குமுறை தொடர்கின்றது; சுரேஷ் எம்.பி தெரிவிப்பு
சர்வதேசமே கண்டிக்கும் அளவில் இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமடைந்துள்ளது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள யாழ். மீடியா கிளப் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையில் குறிப்பாக வடக்கில் இன்றும் ஊடக அடக்கு முறைகள் காணப் படுகின்றமையோடு ஊடகவியலாளர்களுக்கு அச்ச நிலையும் காணப்படுகின்றது.
நாட்டில் பல எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு பல ஊடக பணியாளர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
2009 இற்கு முன்னர் இவ் அபாய நிலை காணப்பட்டபோதிலும் அவ் அபாய நிலை தற்போதும் நீடித்தே வருகின்றது.
ஊடக அபாய நிலையை அரசும் அரசினை பின்னணியாக கொண்டியங்கும் சிலரே மேற்கொண்டு வருகின்றனர்.
ஊடக தர்மம் என்பது மிக முக்கியமானதாகும். குறிப்பாக ஒரு தமிழன் கொல்லப்பட் டால் அதனை தமிழ் ஊடகங்கள் தமிழர் ஒருவரே கொல்லப்பட்டார் என செய்தி பிரசுரிக்கின்றதே.
அதே செய்தியை ஆங்கிலப் பத்திரிகை புலிச் சந்தேகநபர் என செய்தி வெளியிடு கின்றது. ஆனால் சிங்களப் பத்திரிகைகள் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டு விட்டார் என்றே செய்தி வெளியிடுகின்றது.
குறிப்பாக அரசைப் பொறுத்தவரையில் வடக்கில் இராணுவத்திற்கே அதிக முக்கியத் துவம் வழங்கப்படுகின்றது.
பொதுமக்களின் வாழ்விடங்களை அழித்து அக்காணிகளை இராணுவத்தினருக்கு வழங்கி வருகின்றது.
இந்தியாவில் ஊடக சுதந்திரம் மேம்பட்டிருப்பதுடன் ஊடகவியலாளர்களும் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றனர்.
நேற்றுக்கூட (நேற்று முன்தினம்) யாழ்.நீதி மன்றிற்கு முன்னால் யாழ்.ஊடகவியலாளர்கள் ஐவருக்கு இங்குள்ள காடையர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை நீதித்துறையும் பொலிஸாரும் கண்டும் காணாமலும் இருந்துவிடாது இவர் களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
சமூகம் திருத்தப்படல்வேண்டுமாயின் ஊடகப்பணி அவசியம். ஆகவே அதனைச் சுதந் திரமாக செயற்படுத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.
பொதுமக்களின் பிரச்சினைகளை எந்த அரசியல் பின்னணி இன்றியும் பக்கச் சார் பின்றியும் ஊடகங்கள் வெளிக்கொணர வேண்டும் என்றார்.
இதேவேளை இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி சிறிநிக ஜெயக்கொடி ஆவா குழுவை கைது செய்து சிறப்பாக செயற்பட்டு வரு கின்றார் என பாராட்டு தெரிவித்ததோடு வடக்கில் இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்கள், காணி அபகரிப்புக்கள் தொடர்பிலும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பியிருந்தார்.