eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
நாம் நாட்டின் அபிவிருத்திக்காக மட்டுமே வெளிநாடுகளிலிருந்து கடன் பெறுகின்றோம்; மஹிந்த தெரிவிப்பு
அபிவிருத்திக்காக மட்டுமே அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து இனி கடன்களைப் பெற்றுக்கொள்ளுமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் போன்று உணவுக்கா கவும் கோதுமை மாவுக்காகவும் நாம் கடன் பெறவில்லை. எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை விமர்சிப்பதே தற்போது எதிர்க்கட்சியின் அரசியலாகி விட்டது எனமஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரண்டாயிரம் மில்லியன் ரூபா செலவில் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெயாங்கொடை மேம்பாலம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கைக்கு கசினோவை அறிமுகப்படுத்தியவர் ரணசிங்க பிரேமதாசவே. அவற்றை மறந்து விட்டு நாட்டில் ஊழல் மோசடி நடப்பதாக விமர்சனம் செய்கிறது ஐக்கிய தேசியக் கட்சி. மக்களுக்காக பாதையில் இறங்கி மக்களுடன் வாழ்ந்து செயற்பட்ட நாம் விமர்சனங்களுக்கு சளைக்கப் போவதில்லை.

வீதிகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் மக்களோடு நின்ற நாம் எதிர்க்கட்சியினர் தூக்கத்திலிருந்து எழும்பி மேற்கொள்ளும் சேறு பூசல் களுக்கும் விமர்சனங்களுக்கும் பயப்படப் போவதில்லை.

அரசாங்கம் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தேர்தலுக்குச் சென்று மக்களுக்குக் கூறுவதற்கு எதுவுமில்லாததாலேயே எதிர்க்கட்சி அரசாங்கத் துக்குச் சேறு பூசும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.
மக்களோடு இன்று செயற்படும் எமக்கு சேறு பூச நினைப்பவர்களுக்கு அதே சேறு அவர்களுக்கே போய்ச் சேருவதை இப்போது நாம் காணக்கூடியதாயுள்ளது.

நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என மக்களுக்கான தேவைகளை நாம் பெற்றுக்கொடுக்கும் போது எமக்கு எதிரிகள் அதிகரி த்து வருகின்றனர். எனினும் சொல்வதைச் செய்யும் தலைவன் என்ற வகையில் மக்களுக்கான தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதில் நாம் முன்னேற்றகரமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்.

நாம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும் நாட்டில் மோசடி அதிகரித்து வருவதாக எதிர்க் கட்சியினர் தெரிவிக்கின்றனர். அவர்களின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வற்றை அவர்கள் மறந்து விட்டார்கள்.

நாம் மக்களோடு வாழ்ந்து அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள். அவர்களின் தேவை எது என்பதை நாம் அறிந்து அதனைப் பெற்றுக் கொடுப்போம். பட்டதாரிகள் வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளோம்.
மரணங்களைக் கணக்கெடுத்து வருவதை சிலர் இப்போது தொழிலாக செய்து வருகின்றனர். தினமும் நூற்றுக் கணக்கில் மரண ங்கள் நிகழ்ந்த யுகம் ஒன்றிருந்தது. இப்போது எந்த மரணமும் இடம் பெறுவதில்லை என்றார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 19 Jan 2014 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: வலம்புரி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |