eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
மன்னாரில் குவியும் மனித எலும்புக் கூடுகள்
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி 9வது தடவையாக நேற்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டபோது மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக நேற்று சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மு.ப 11 மணிவரை குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ண ஆகியோர் முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன்போது முதலில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதோடு மேலும் ஒரு மனித எலும்புக்கூடு உள்ளமை அடையாளம் காணப்பட்டது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வரை 37 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றுடன் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் தொகை 40 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை காலை 11 மணிவரை 3 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை மற்றும் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை ஆகியோர் மனித புதைகுழி உள்ள இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மீண்டும் நாளை திங்கட்கிழமை 20-ம் திகதி மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மனித புதை குழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 19 Jan 2014 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: வலம்புரி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |