eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
அரசியல் தீர்வை அரசுதராது என்ற எண்ணமே நாம் சர்வதேசத்தை எதிர்பார்க்கக் காரணம்.
மூன்று தசாப்த காலயுத்தத்தின் கொடிய விளைவுகளை வடுக்களாக சுமந்துநிற்கும் எமது மக்களுக்கு செய்ய வேண்டிய கட்டாயக் கடமைகளில் ஒன்றை இன்று நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.

வடமாகாண சபை நிறுவப்பட்ட பின்னர் முதலாவது முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையம் வைகறை என்று பெயர் சூட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேற்றவாறு வேறு மாவட்டங்களிலும் இது போன்ற பராமரிப்பு நிலையங்களைத் திறந்து வைக்க நட வடிக்கையயடுப்போம் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந் நிலையம் நேற்றுமுன்தினம் காலை வவுனியா பம்பைமடு ஆயுர் வேத மருத்துவமனை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அண்மைய கொடியயுத்தத்தினால் உயிரை இழந்தவர்களைவிட அதன் வடுக்களை ரணங்களாகச் சுமந்துதங்களைத் தாங்களே சுமைகளாக எண்ணுமளவிற்கு வேதனைப்படும் உறவுகளுக்காக இந்த நிலை யம் திறக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஒரு மனிதனின் இயக்கத்திற்கு முள்ளந்தண்டு வடம் என்பது முதன்மையானது. அவனின் முழுசெயற் பாடுகளுக்கும் அதுவே உறுதுணையாகவுள்ளது.

எனவே தான் இது பாதிப்படையும் போது நாம் சுயமாக இயங்க முடியாதவர்களாக மாறுகின்றோம். எமது நாட்டை பொறுத்தவரை முள்ளந்தண்டு வடம் செயலிழக்க பின்வரும் காரணங்களைப் பிரதான மாகக் கூறுவர்.

அவையாவன:-

யுத்தத்தின் போது நேரடித்தாக்குதல்களுக்கு உள்ளாகி செயலிழக்கப்படுகின்றமை.

விபத்துக்களால் குறிப்பாக வீதி விபத்துக்களின் போது ஏற்படும் பாதிப்புக்களால் செயலிழக்கின்றமை.

நோய்களின் தாக்கத்தினால் செயலிழக்கின்றமை ஆகியவையாகும்.
குறிப்பாக மக்களுக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களும் பொது மக்களுமாகச் சேர்ந்து பெரும்பாலாக இளம் வயதினரே இவ்வாறாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் குடும்பத்தலைவர்களும் இதனுள் அடங்குகின்றனர். இதனால் இவர்களின் உழைப்பில் தங்கி யிருந்த குடும்ப அங்கத்தவர்களின் வருமானம் இல்லாதுபோனதுடன், சுயமாக இயங்கமுடியாத இவர்களை குடும்பத்தின் ஏனையவர்கள் பராமரிக்க வேண்டியுள்ளதால் மொத்தத்தில் இவர்களின் குடும்பச் சுமையைச் சுமக்க முடியாது அவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

மீள்குடியேற்றப் பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு இதற்கான போக்குவரத்து வசதிகளும் இல்லை. பொரு ளாதார வசதிகளும் இல்லை. எனவே தான் இவ்வாறான ஒரு நிலையம் அமைக்கப்பட்டிருப்பது இவர்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
எமது நாட்டில் தற்போது காணப்படும் சுகாதார சேவையில் இவ்வாறான பராமரிப்பு நிலையங்கள் இல்லை. இவற்றை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடும் அமைச்சிடம் இல்லை.

எனினும் எமது வடமாகாண சபையானது காலத்தின் அவசியத் தேவை கருதி இவ்வாறான நிலைய மொன்றைத் திறப்பதற்கு முதல் முயற்சி எடுத்துள்ளது.

சிலர் கேட்கலாம் ஏன் இந்த நிலையம் வவுனியாவில் திறக்கப்படுகின்றது என்று, நான் ஏற்கனவே கூறியது போன்று இதற்கான நிதிவளம் இல்லாத நிலையில் ஏற்கனவே இருந்த வளங்களைப் பயன்படுத் தியே இந்நிலையத்தை முதற்கட்ட மாக இயங்க வைப்பதற்கு நட வடிக்கை எடுத்துள்ளோம்

இந்தநிலையத்திற்கு வைகறை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வைகறை என்பது அதிகாலை விடியலைக்குறிக்கும் வாழ்வில் நம்பிக்கை இழந்து இருட்டடைந்த வாழ்க்கையில் விடியலை எதிர்பார்த்து நிற்கும் இவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்திலேயே இந்த வைகறை நிலையம் திறக் கப்பட்டுள்ளது

இவர்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள மன அமைதி அவசியம். மன அமைதியைப்பெற நற்சிந்தனை அல்லது இறை சிந்தனை அவசியம். மனதில் நற்சிந்தனைகளை வளர்த்து இறை நம்பிக்கையுடன் எதிர்காலத்தில் நம்பிக்கையுள்ளவர்களாக இவர்கள் மாற நாம் வழி வகுக்க வேண்டும்.

நாங்கள் பெரும்பாலும் அரசியல் பேசுவதிலேயே இன்று காலம் கழித்து வருகின்றோம்.

எமது மக்கள் எழுந்து நடக்க முடியாமல் முனகிக் கொண்டிருக்கும் போது தூரத்தே தெரியும் அரசியல் இலக்குகளை அவர்களுக்கு எடுத்துரைப்ப தால் பயன் ஏதும் இல்லை.

அதற்காக அரசியல் தீர்வுகள் வேண்டாம் என்று கூறவில்லை. யதார்த்தத்தை உணர்ந்து எவற்றுக் கெல்லாம் முன்னுரிமை வழங்க வேண்டும். என்பதை யூகித்தறிந்து மக்கள் நலம் நாடி அதற்கு முன் னுரிமை கொடுத்து நடந்து அதே நேரத்தில் அரசியல் இலக்குகளை யும் அடைய ஆவன செய்வோமாக .

உள்ளூரில் எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் அருகி வருகின்றது. இதனால் தான் பலரும் சர்வதேச அரசியல் நெருக்குதல்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் அந்தக் கால கட்டத்தில் அதன் போது நோயினால் அல்லற்படுபவன், வறுமையால் வாடுபவன், அச்சங்களினால் அச்சுறுத்தப்படு பவன் என்ன செய்வது? அவன் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைக் கொண்டுவருவது எமது தலையாய கடமையல்லவா? எங்கள் உள்ளங்களில் பரிவு, அன்பு, பாசம் போன் றவை எழுந்தால் தான் மக்களின் நலம் நாட நாம் முன்நிற்போம்.

அப்பேர்ப்பட்ட அன்பின் பிரதி பலிப்பே திறக்கப்பட்ட இந்த வைகறை பராமரிப்பு நிலையம்.

தூரத்துப்பச்சைக்காக நாங்கள் காத்துநிற்கும் அதேநேரம் நேரத்துக்குகந்த நடவடக்கைகளை எம் மக்கள் நலம் கருதி எடுப்போமாக!
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 19 Jan 2014 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: வலம்புரி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |