eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
ஆஸி. சிறையில் வாடும் ஈழத்தமிழரைக் காக்கவும்; வைகோ
ஆஸ்திரேலியச் சிறையில் வாடும் ஈழத்தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்குமாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள அவசர கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் நடைபெற்ற போரால் தங்கள் உயிர்களைப் பாதுகாக்க, ஈழத்தமிழர்கள் உலகின் பல நாடுகளுக்கும் அடைக்கலம் தேடிச் சென்றனர். இவ்வாறு பயணித்தபோது படகுகள் கவிழ்ந்து பலர் கடலுள் மூழ்கி மடிந்தனர்.

இதில், 46 ஈழத்தமிழர்கள், அடைக்கலம் தேடி ஆஸ்திரே லியாவுக்குச் சென்ற போது ஆஸ்திரேலிய அரச பாதுகாப்பு உளவு நிறுவனம், அடைக்கலம் தேடி வந்த அவர்களைச் சிறையில் அடைக்கச் செய்தது. ஈழத்தமிழ் அகதிகள், இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தோடு தொடர்பு உடையவர்கள் என்று அந்நாட்டின் பாதுகாப்பு உளவு அமைப்பு, குற்றம் சாட்டி உள்ளது.

அடிமை விலங்குகளில் இருந்து தங்கள் தாயகம் விடுபட, சுதந்திரம் பெறத் தமிழர்கள் ஏங்குவதும், அதற்காக அக்கறை காட்டுவதும் எந்த விதத்திலும் தவறு அல்ல. இந்த அகதிகளால் ஆஸ்திரேலிய மக்களுக்கோ, அரசுக்கோ எந்த இடையூறும் கிடையாது.

அனைத்து உலக ஒப்பந்தங்களின்படி தமிழ் அகதிகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை ஆஸ்திரேலிய அரசுக்கு உண்டு. அதற்கு மாறாக, கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறையில் அடைத்து வைத்து இருப்பதால், அவர்கள் தாங்க முடியாத மனத்துன்பத்துக்கும், அழுத்தத்துக்கும் ஆளாகி உள்ளனர்.

அதனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஈழத்தமிழ் அகதி தற்கொலை செய்து கொண்டார். இலங்கை அரசை திருப்திப்படுத்துவதற்காக, ஆஸ்திரேலிய அரசு, தமிழ் அகதிகளை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்து உள்ளது.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில், உரை ஆற்றிய ஆஸ்திரேலியப் பிரதமர், இலங்கை அரசுக்குச் சாதகமாக, ஜனாதிபதி ராஜபக் வுக்கு ஆதரவாக, அரசு நடத்தும் தாக்குதலையும், சித்திரவதையையும் நியாயப்படுத்திப் பேசினார்.

மறுநாளே, இலங்கை அரசோடு ஆஸ்திரேலிய அரசு வணிக ஒப்பந்தம் மேற்கொண்டு இலங்கைக் கடற்படைக்கு இரண்டு கப்பல்களையும் வழங்கி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஏராளமான தமிழ் அகதிகளை ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு அனுப்பியதால், அவர்களுள் பலர் துன்பத்துக்கு ஆளாகி மடிந்தனர்.

எனவே, தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள 46 தமிழ் அகதிகளையும் அங்கிருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்ப விடாமல் தடுத்து, அவர்கள் உயிர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை, இந்தியப் பிரதமர் தூதரக உறவுகள் மூலமாக உடனடியாக மேற்கொள்ள வேண்டுகிறேன் - என்றுள்ளது.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 20 Jan 2014 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: உதயன்
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |