eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
கடற்படைத் தளபதிக்கு எதிராக ஊடக அமைப்புகள் போர்க்கொடி!
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய கடற்படைத் தளபதியின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ள ஊடக அமைப்புக்கள் குறித்த சம்பவத்திற்காக கடற்படை தளபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.


அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டத்தை களைப்பதற்காக ஆயுதங்களுடன் இறக்கிவிடப்பட்ட கடற்படை சிப்பாய்களுடன் சிவில் உடையில் இருந்த கடற்படைத் தளபதி அங்கு செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு அவரது கடமையை செய்ய விடாது தடுத்ததுடன் அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியுள்ள நிலையிலேயே ஊடகவியலாளர் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றன.

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவால் சுயாதீன ஊடகவியலாளர் ரொஷான் திலீப் குமார மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மிகவும் பாரதூரமானது என சிறிலங்கா இளம் ஊடகவியலாளர் அமைப்பு தொழில்சார் ஊடகவியலாளர் அமைப்பு சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பு உட்பட ஊடகவியலாளர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதனால் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் ஆணைக்குழு மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது ரத்துபஸ்வல பிரதேசத்தில் தண்ணீருக்காக போராட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தி களைத்தபோது அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீது அப்போதைய பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன தாக்குதல் நடத்தியதற்கும் கடற்படைத் தளபதி ஹம்பாந்தோட்டையில் வைத்து தாக்குதல் நடத்தியதற்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்றும் ஊடகவியலாளர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

டோரா படகொன்றில் கடற்படையினர் வருவதை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த போது அங்கு அரைக்காட்சட்டையுடன் வந்த கடற்படைத் தளபதியிடம் ஊடகவியலாளருக்கான அடையாள அட்டையை காண்பித்து தான் ஒரு ஊடகவியலாளர் என்பதை உறுதிப்படுத்திய போதும் கடற்படைத் தளபதி தன் மீது தாக்குதல் நடத்தியதாக தாக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்தார். கடற்படைத்தளபதி தனது கமராவை இழுத்தெடுத்து தனது கழுத்தின் மீது தாக்கியதாக குறிப்பிட்ட ஊடகவியலாளர் தகாத வார்த்தைகளால் தன்னைத் திட்டித்தீர்த்ததாகவும் ஊடகவியலாளர் திலீப் குமார கூறினார்.

அத்துடன் இவ்வாறான படைத் தளபதிகளாக நாட்டில் இருக்கின்றனர் என்று எண்ணும் போது தாங்கள் வெட்கப்படுவதாகவும் ஊடவியலாளர் ரொஷான் திலீப்குமார தெரிவித்ததுடன், இதுதானா ஊடக சுதந்திரம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடக சுதந்திரம் தொடர்பில் ஊடகங்கள் தொடர்ச்சியாக விமர்சித்துவரும் நிலையில் நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க கடந்தவாரம் நாடாளுமன்றிலும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் பெருமையுடன் கூறியிருந்த போதிலும் அவை வெறும் வார்த்தை ஜாலங்களாகவே மாத்திரம் இருப்பதாகவும் ஊடகவியலாளர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

ரத்துபஸ்வல தாக்குதலின் போது ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஊடகவியலாளர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால் கடற்படைத் தளபதியினால் ஊடகவியலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் போன்ற தாக்குதல்கள் தொடராது இருக்க வேண்டுமானால் தாமதமின்றி கடற்படைத்தளபதிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஊடகவியலாளர் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
அச்சுப்பிரதி பதிவுசெய்யப்பட்டது: 12 Dec 2016 செய்தி மூலம்: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |