eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
புதனன்று கனடாவுக்கான பயணத்தை ஆரம்பிக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எதிர்வரும் ஜனவரி மாதம் நான்காம் திகதி கனடாவுக்கு பயணமாகவுள்ளார். 16ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள முதலமைச்சர் இரட்டை நகர ஒப்பந்ததம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதோடு பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார். கனடியத் தமிழ் சமூகத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளனர்.


ஜனவரி மாதம் ஆறாம் திகதி கனடாவைச் சென்றடையவுள்ள முதலமைச்சர் மறுநாள் ஏழாம் திகதி கனடாவில் உள்ள அனைத்து ஊடகங்களுக்குமான சந்திப்பில் பங்கேற்கிறார். அதனைத்தொடர்ந்து ஜனவரி 8ஆம் திகதி 'முதல்வருடனான ஒரு மாலைப் பொழுது' என்ற தலைப்பிலான நிதிதிரட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. ஜனவரி 10 செவ்வாய்க்கிழமை, வடக்கு கிழக்கில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் பிரம்டன் மாநகரசபையோடும் விரிவான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளார்.

குறிப்பாக பிரம்டன் மாநகரசபையோடு வவுனியா மாநாகர சபையை இணைத்து செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இரு நகர ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவது குறித்தும் இப்பேச்சுவார்த்தையில் அதிகூடிய கவனம் செலுத்தப்படவுள்ளது. அதேநேரம் ஜனவரி 14ஆம் திகதி முல்லைத்தீவு நகரை அனைத்து துறைகளிலும் மீண்டெழ வைப்பதற்காக கனடாவின் மார்க்கம் நகரத்தோடு இணைந்து 'முல்லைத்தீவு -மார்க்கம்' இரட்டை நகர உடனபடிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த உடன் படிக்கையில் மார்க்கம் மாநகரசபை மேயரும் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கைச்சாத்திடவுள்ளனர். முறநாளான ஜனவரி 15ஆம் திகதி மார்க்கம் மாநகரசபையின் அனுசரணையுடன் நடைபெறும் 'மார்க்கம் பொங்கல் விழா'வில் வடமாகாண முதலமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

அதனையடுத்த தினங்களில் புலம்பெயர் தமிழர்களுடன் விசேட சந்திப்பொன்றிலும் முதல்வர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அந்நிகழ்வு தற்போது வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 31 Dec 2016 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |