eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
நெடியவனை ஒப்படைக்க நோர்வே மறுப்பு!
விடுதலைப் புலிகளின் உறுப்பினரான நெடியவனை இன்டர்போலிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுப்பு வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதன் பின்ணியில் நெடியவன் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில் நெடியவனை இன்டர்போல் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே இணங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நோர்வேயில் புலிகளின் தலைவராக நெடியவன் செயற்பட்டு வருவதாகவும், அவருக்கு எதிராக இன்டர்போல் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

நோர்வே பொலிஸார் நெடியவனிடம் விசாரணை நடத்திய போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நெடியவன் புலிகளின் சார்பில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டமை குறித்து நெதர்லாந்து பொலிஸார், நோர்வே சென்று விசாரணை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுமந்திரன் படுகொலை சதி முயற்சி தொடர்பில் உத்தியோகபூர்வமாக அணுகினால் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கைக்கான நோர்வே தூதரகம் அறிவித்துள்ளது. தூதரகம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அச்சுப்பிரதி பதிவுசெய்யப்பட்டது: 07 Feb 2017 செய்தி மூலம்: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |