eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
நாயாறில் சிங்கள மீனவர்களின் வாடிகளுக்கு தீவைத்த சிங்கள மீனவர்கள்! இனமோதலை ஏற்படுத்த சதி
முல்லைத்தீவு - நாயாறுப் பகுதியில் இரு வேறு இடங்களில் அமைந்திருந்த தென்பகுதி மீனவர்களின் மீன் வாடிகளை வேண்டுமென்றே தீயிட்டுக் கொழுத்தியதான சந்தேகத்தின் பேரில் இரு தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நாயாறுப் பகுதியில் பருவகாலத்தில் மட்டுமே தொழில் புரிய தென்னிலங்கை மீனவர்கள் அமைத்த வாடிகளில் சிலவற்றினை கடந்த வெள்ளி இரவு சில விசமிகள் வேண்டுமென்றே தீயிட்டுக் கொழுத்தியதனையடுத்து பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும் இவ்வாறு ஏற்பட்ட தீயினால் பாரிய சேதம் ஏதும் ஏற்படாதமையினால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய இன முறுகலகள் தவிர்க்கப்பட்டன.

இதன் காரணமாக, சனிக்கிழமை முழுவதும் பகல்வேளையில் பொலிசார் அப்பகுதியில் விசாரணைகளில் ஈடுபட்டு நடமாடிய வேளையில் சுமார் 12 மணியளவில் மேலும் இரு பாரிய வாடிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு தீயிடப்பட்ட வாடிகளிற்குள் படகுளின் வெளியிணைப்பு இயந்திரங்கள் வலைகள் பெருந்தொகையாக இருந்தன. இவ்வாறு விசமிகள் வைத்த தீயானது வலைகளில் பரவியதனையடுத்து பாரிய தீ ஏற்பட்டது. இதனால் தீயினை கட்டுப்படுத்த முடியாது போனது.

இருப்பினும் தீயை ஏனைய பகுதிக்கு பரவாது தடுப்பதில் தமிழ் மீனவர்களும் படையினரும் முழு மூச்சில் ஈடுபட்டனர். இவ்வாறு ஏற்பட்ட தீக்கான காரணம் இனம்தெரியாதோர் வைத்த தீ என்று மட்டும் கூறித் தப்பிவிட அங்கிருந்த இருவர் முயன்றனர். இருப்பினும் அப்பகுதியில் வேறு எவருமே நடமாடியதை அவதானிக்க முடியாத காரணத்தினால் அங்கிருந்த இருவரில் ஒருவரே தீயினை வைத்திருக்க வேண்டும் எனக் கருதிய பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இப்பகுதியில் வாடி அமைத்துள்ள விடயம் காரணமாக தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களிற்கு இடையில் நீண்டகாலம் முறுகல் நிலமை உள்ள நிலையில், இதனை மேலும் பெருப்பித்து மாவட்டத்தில் ஓர் குழப்பநிலையை ஏற்படுத்தும் நோக்கிலேயே இச் செயல் செய்யப்பட்டதாக உள்ளூர் மீனவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 07 Feb 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |