eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
சம்பந்தனை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறார் கஜேந்திரகுமார்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தம்முடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறிக்கொண்டு, தனக்கு பாதுகாப்பு இல்லை என மக்களிடம் செல்வதை தவிர்த்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் தமக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் சுமந்திரனும் சம்பந்தனுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

எழுக தமிழ் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான அங்கீகாரம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எழுக தமிழ் பேரணியைத் திசை திருப்புவதற்காக குறித்த பேரணியில் கலந்துகொண்ட அனைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு கட்டத்திலும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் என எந்தவொரு கட்டத்திலும் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கைக் தமிழரசுக் கட்சிக்கு மாறானதாகவே எழுக தமிழ் பேரணி என பிரசாரம் செய்தது தமிழரசுக் கட்சியே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 24 Feb 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |