eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
சிங்கப்படை போல புலிப்படையும் வரும்! 1960களிலேயே எதிர்வு கூறிய இராணுவத் தளபதி
சிங்கப்படை போல புலிப்படையும் வரும் என்று இலங்கையின் முதலாவது இராணுவத்தளபதி மேஜர்ஜெனரல் அன்ரன் முத்துக்குமாரு 1960களில் கூறியது, பின்னர் பலித்து விட்டது.

அவர் அதனை தீர்க்கதரிசனமாகவோ அல்லது அனுபவத்தின் வாயிலாகவோ அல்லது எதெச்சையாகவோ சொல்லியிருக்கலாம் என இலங்கைக்கான உதவு உதவி மையத்தின் இணைப்பாளர் கே. சொர்ணலிங்கம் தெரிவித்துள்ளார்.


கல்முனையில் இடம்பெற்ற தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், முதலாவது இராணுவத்தளபதி மேஜர்ஜெனரல் அன்ரன் முத்துக்குமாரு காலத்தில்தான் இலங்கையின் முதலாவது படையணி தோற்றுவிக்கப்பட்டது. அப்படையணிக்குப் பெயர் வைப்பதில் சிறு சர்ச்சை ஏற்பட்டது. அதாவது அன்றைய அரசியலாளர்கள் இப்படையணிக்கு 'சிங்க ரெஜிமண்ட் ' எனப்பெயர் வைப்போம் என்றனர்.

அத்தருணம் முத்துக்குமாU சொன்னார். 'சிங்கம் என்பது ஒரு இனத்தின் அடையாளமாகிப்போய்விடும். அப்படி வைக்கத்தொடங்கினால் எதிர்காலத்தில் 'புலிப்படை ' என்று இன்னுமொரு அணிதோன்றும். எனவே சிங்க ரெஜிமண்ட் என்ற பெயர் நல்லதல்ல.பொதுவான ஒரு பெயர்வைத்தால் நல்லது என்றார். ஆனால் அப்போதைய அரசியல் வாதிகளோ விடவில்லை. சிங்கரெஜிமண்ட் என்று தான் பெயர் வைக்கவேண்டும் என்றனர். இராணுவத்தளபதிக்கோ வேறு வழிதெரியவில்லை.சரி நடப்பது நடக்கட்டும் உங்கள் விருப்பப்படியே பெயர் வைப்போம் என்றார்.

பிற்காலத்தில் என்ன நடந்து என்பது தொடர்பில் அனைவருக்கும் தெரியும். எனவே எந்த செயற்பாடும் எந்தச்சிந்தனையும் உள்ளத்திலிருந்தான் வரவேண்டும் என்று கூறினர்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 12 Mar 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |