eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
காலஅவகாசம் வழங்குவது போர்க்குற்றங்களை மறைப்பதற்கு துணைபோகும்! பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்
ஐ. நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என போரினால் பாதிக்கப்பட்ட மக்களும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு மீண்டும் மீண்டும் கால அவகாசம் வழங்குவதன் மூலம் யுத்த காலத்தில் யுத்தக் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை மூடிமறைப்பதற்கு துணைபோகும் செயற்பாடாகவே அமைந்துள்ளது எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


அரசாங்கத்துடன் இணைந்து இந்தத் தீர்மானத்திற்கான பிரேரணையை முன்வைத்துள்ள அமெரிக்கா, பிரித்தானியா, சுவிஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கொழும்பிலுள்ள தூதரகங்களிடமும், ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்குச் சென்ற போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மனுக்களை கையளித்து ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

ஐ.நா அலுவலகத்திற்கு சென்ற பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ள ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள், வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் மற்றும் போராட்டங்களை தாங்கள் அறிந்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குமாறு ஏற்கனவே தமிழ்த் தேசிய கூட்மைப்பு ஐ.நாவிற்கு பரிந்துரைத்துள்ளதாக ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் வடக்கு, கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்புக்களை அடுத்து கொழும்பு மருதானையில் அமைந்துள்ள சீ.எஸ்.ஆர். மண்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வடக்கு, கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் ஸ்ரீலங்காவிற்கு மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்திடம் தமது பிள்ளைகளை தாமே நேரடியாக கையளித்ததாகத் தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாய், இதனால் தமதுபிள்ளைகள் தொடர்பில் அரசாங்கத்திடமே கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இறுதி யுத்தத்தின்போது அரச படையினரால் கொத்துக் குண்டுகளும், இராசாயன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டு தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரங்களை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஊடாக எவ்வாறு கால அவகாசம் வழங்க முடியும் என்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஸ்தாபர் தேவராஜா கிருஸ்ணபிள்ளை கேள்வி எழுப்பினார்.

இதேவேளை பிரதமர் ரணில் விகரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நிலைமாறுகால நீதிப்பொறிமுறை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய செயலணி பாதிக்கப்பட்ட மக்களிடம் நாடளாவிய ரீதியில் கருத்துக்களை பெற்று தயாரித்த அறிக்கையை அரசாங்கத்திடம் படித்துப்பார்ப்பதற்குக்கூட விரும்பாத நிலையில்ஸ்ரீலங்கா விற்கு எந்த அடிப்படையில் கால அவகாசம் வழங்க அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் முன்வந்தன என்று சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளில் ஒருவரான சுந்தரம் மகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 15 Mar 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |