eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
சரணடைந்தவர்களை பேருந்தில் ஏற்றிச் சென்றதை நான் கண்டேன்! முன்னாள் போராளியின் மனைவி
விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இந்த பலரை எனது கணவருடன் சேர்த்து அரச பேருந்தில் ஏற்றிச் சென்றார்கள். அதை நான் கண்டேன், தற்போது அவர்கள் எங்கே? என நிர்வாகத்துறை துணை பொறுப்பாளர் இளஞ்சேரனின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 29ஆம் நாளாக தொடர்கின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகத்துறை துணை பொறுப்பாளர் இளஞ்சேரனின் மனைவி ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார்.


“இறுதி யுத்தத்தில் எனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். அவருடன் பல விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களும் இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாகவும் சரணடைந்தனர். அரசியல்துறை துணை பொறுப்பாளர் தங்கன், யாழ் அரசியல்துறை பொறுப்பாளர் இளம்பருதி, மலரவன், கரிகாலன் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் குடும்பம் குடும்பமாக சரணடைந்தனர். அவர்கள் அரச பேருந்தில் ஏற்றப்பட்டு அழைத்து செல்லப்பட்டதை நான் அவதானித்தேன்.

அனைவரும் பாதர் ஒருவருடன் சரணடைந்தவர்கள், அவர்கள் குறித்து இன்றுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் வருவார்கள் என நானும் காத்திருக்கின்றேன். எனது கணவர் செல்லம்போது ஒரு விடயத்தினை குறிப்பிட்டார். “நான் அவர்களுடன் போகின்றேன். நீரும் பிள்ளைகளும் என்னுடன் வந்தால் அனைவருக்கும் ஏதும் நடந்து விடும். எம்மை தேட யாரும் இருக்கமாட்டார்கள். அதனால் என்னையும் பிள்ளைகளையும் தனியே செல்லுமாறு குறிப்பிட்டார்”. அதனால் நானும் பிள்ளைகளும் அவருடன் செல்லவில்லை. அவ்வாறு சென்றிருந்தால் நானும் காணாமல் போயிருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 21 Mar 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |