eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த வடபகுதி கடலில் தீவிர ரோந்து!
கடல் மார்க்கமாக, கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்துவதைத் தடுப்பதற்கு, நாள் முழுவதும், கடற்படையினரின் ரோந்துப்பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, வடக்கு கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ஜெயந்த டி சில்வா தெரிவித்தார். காங்கேசன்துறை கடற்படைத் தலமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் போதை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், முப்படையினரும் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் அதிகளவு போதைப்பொருள், வடக்கு கடல் மார்க்கமாகக் கடத்தப்படுவதாக, பல்வேறு தரப்பினராலும் கூறப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் கடற்படை வீரர்களும் புலனாய்வுத் துறையினரும் கடற்கரையோரங்களில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“கடந்த வருடம் 1,000 கிலோவுக்கு அதிகமான கஞ்சாவினைக் கைப்பற்றியுள்ளோம். இவற்றைத் தவிர, போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு, பொலிஸார் ஊடாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பருத்தித்துறைக்கு வடமேற்கே, நாட்டுப்படகு மூலம் யாழ்ப்பாணத்துக்கு ஹெரோய்ன் போதைப்பொருள் கடத்த முற்பட்ட ஆறு பேர், இன்று (நேற்று) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 13.5 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்போது பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வடகடலில், அதிகளவு மீன்பிடி மேற்கொள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள், மீனவர்களுடன் மீனவர்களாக இலங்கைக் கடற்பரப்புக்குள் உட்பிரவேசிப்பதனைத் தடுப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். குறிப்பாக பகல், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், கடற்படையினரின் ரோந்து இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கிடமான முறையில் வரும் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளைச் சோதனை மேற்கொள்ள, கடற்படை வீரர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 03 Apr 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |