eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
மருதங்கேணி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் நிறுத்தம்!
மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மேற்படி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பான சாத்திய ஆய்வு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வரும் நிலையில், இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றாகவே மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.

மேற்படி திட்டத்தினால் வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு பாதிப்பு உண்டாகும் என தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்த நிலையில், அந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர், நாரா நிறுவனத்தினர், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 19 Apr 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |