eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்துக் கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு!
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தமது கட்சி அரசியலில் இணைத்துக் கொள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மட்டக்களப்பு நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் அரசியல் வாழ்க்கை தொடர்பாக ஆராயப்பட்டு அது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மத்திய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார். ´புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்க்கை முறையை சரியான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும்.

அவர்கள் சமூகத்தில் உள் ஈர்ப்பு செய்யப்பட்டு சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். அரசியல் வாழ்க்கைக்கு சரியான விதத்தில் உரிய நேரத்தில் கதவு திறக்கப்பட்டு அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்´ என அந்த தீர்மானம் குறிப்பிடுவதாக அவர் கூறினார்.
®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 01 May 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |