eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
ஒரு மென்மையான இதயம்….!
மன்னாரில் நடக்கிற முதல் கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேண்டும். தளபதி சுபனிடம் டாம்போ இந்த வேண்டுகோளை முன்னரே விடுவித்திருந்தான். அதனை அவருக்கு அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டுமிருந்தான்.

சிலாபத்துறை படைத்தளம் மீதான தாக்குதல் திட்டம் தயாரிக்கப்பட்டபோது , அங்கு கரும்புலித் தாக்குதலை நிகழ்த்துவது டாம்போ எனத் தீர்மானிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக… அந்தக் காட்டு முகாமில் உயர்ந்த மரமொன்றில் நிழலில், அதன் அடிவேரில் சாய்ந்திருந்தபடி…. நண்பனொருவனுக்கு டாம்போ தன் வீட்டுக்கதையைச் சொன்னான்.

“வீட்டில் நான் தான் மூத்த பிள்ளை. இரண்டு தம்பிமாருக்குப் பிறகு கடைசியாகத் தங்கச்சி பிறந்தாள். நான் சின்ன வயசாக இருக்கும் போதே அப்பாவுக்கு இயலாமல் போய்விட்டது. அம்மாதான் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து , எங்களை வளர்த்தா. நான் கொஞ்சம் வளர்ந்ததும் அம்மாவின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளத் துவங்கினான். நாங்கள் எல்லோரும் பாசத்தோட பிணைஞ்சு வளர்ந்தம். இந்து வருடங்களுக்கு முன்னம் எனக்குப் பதினெட்டு வயதாக இருக்கும்போது நாட்டு நிலைமை என்னை போராட்டத்துக்குள்ள இணைத்தது…..

அது எல்லோருக்கும் இருக்கிற கடமையும் தானே …..”

“இதுக்குப்பிறகு ஒரு சண்டையில காயப்பட்டு, சிகிட்சைக்காக தமிழ்நாட்டுக்குப் போயிருந்தன். அங்கு வைத்து ஏனைய தோழர்களோடு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு, வவுனியா இந்தியப்படை முகாமில் வைக்கப்பட்டிருந்தன்…. சிறைக்குள்ளே இருந்த காலத்தில் , இந்தியப் படைக்கெதிரான போரில் என்னால் பங்கேற்க முடியவிலையே என்ற துயரத்தில மனது துடித்தது….. அங்கேயிருந்து சிறையை உடைத்து போராளிகள் வெளியேறும் போது நானும் வந்தேன் அந்த முயற்சியில காலில காயப்பட்டேன்.”

“வீட்டில், நாங்கள் எல்லோருமே எங்களுடைய ஒரேயொரு தங்கச்சியில் மிகுந்த அன்பு வைத்திருந்தம். அவளின் சாமத்திய வீட்டை சொந்தக்காரர் எல்லோருக்கும் சொல்லி வீட்டில் எங்களின் வசதிக்கேற்ற அளவிற்கு பெரிதாகச் செய்தம்….. ஆனால்

….. சாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள், தம்பிக்கும் தங்கச்சிக்கும் இடையில் சின்னதாக ஒரு பிரச்சினை. அம்மா தம்பிக்கு அடித்துபோட்டா…. தன்னாலதான் அண்ணனுக்கு அடி விழுவதேன்று நினைத்து …. எங்களின் ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து உயிரைப் போக்கிக்கொண்டாள்…”

ஒரு கையால் கண்களைத் துடைத்துக்கொண்டு; கிழே குனிந்தபடி ஒரு தடிகுச்சியால் மண்ணைக் கிண்டிக்கொண்டு , டாம்போ சொன்னான்…..

“இதற்கிடையில் எங்களின் இன்னொரு தம்பி பயணம் போனவன், கடற்படையால கைது செய்யப்பட்டான். இன்னும் வீட்டுக்கு வரவில்லை. இராணுவம் பிடித்துச் செல்கின்ற ஆக்கள் காணாமல் போவதென்பது இங்கு புதினமில்லைத் தானே…

…. அதற்குப் பிறகு; தங்கை இறந்து ஒரு மாதம் போக முந்தியே தம்பி இயக்கத்திற்கு வந்திட்டான். எங்களுடைய வீட்டு நிலைமையைத் தெரிந்துகொண்ட சுபன் அண்ணை, தம்பியை வீட்டுக்குப் போகச் சொல்லி அனுப்பினபோதும் போகமாட்டன் என்று அடம்பிடித்துக் கொண்டு முகாம் ஒன்றில் நின்றான்…..

….. பிறகு நான்தான் அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வந்து பயிற்சி முகாமில் விட்டன்…. இப்ப அவன் அங்கு ஓடித் திரிகின்றான்…. நான் கரும்புலியாகப் போகப் போகிறேன் என்று அவனுக்கு சொல்லிபோட்டன் …. “என்ற முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு வேறெங்கோ பார்த்தான்.

மன்னாரில் நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான் செய்ய வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருந்தது…. அதை நான் சுபன் அண்ணையிட்டச் சொல்லியிருந்தனான்…. இப்ப அந்த நாளும் வந்திருக்குது….”

கலக்கமில்லாத மிகத் தெளிவான கண்களோடு தோழனைப் பார்த்துச் சொன்னான்…..

“இப்படி ஒரு நிறைவான சாவு எல்லோருக்கும் வராதடா…….”

- உயிராயுதம் பாகம் 1லிருந்து.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


®…®¯®¯®ª¯®ª®¿®°®¤®¿ ®ª®¤®¿®¯®¯®¯¯®¯®ª¯®ª®¯®®¤¯: 05 May 2017 ®¯®¯¯®¤®¿ ®®¯®²®®¯: செய்தி
Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |