தனி ஈழம் மலர உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும், நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து போராடும் என்று கோவையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் கட்டவிழ்ந்த இன அழிப்புப் பெரும் துயரை நினைவு கூர்ந்து அந்தக் குறுகிய வன்முறை வெளியில் தம்மை ஆருதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை தமிழர் தாயகப் பிரதேசங்களெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றன.
பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில், சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை நினைவேந்தும் வகையில் லண்டன், பாரிஸ் நகர வீதிகளில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பரப்புரை ஊர்திகள் உலாவந்த வண்ணமுள்ளன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழீழத் தாயகம் நோக்கிய சிற்றலையூடான (short-wave) வானொலி ஒலிபரப்பு 12 250 mhz எனும் அலைவரிசையூடாக ஒலிக்கவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இன்று (17) முதல் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளனர்.
போரினால் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
நமது முதல் அமைச்சரின் அறிவும் துணிவும் அவரை ஒரு நாள் இந்தியாவின் உச்ச சிம்மாசனத்தில் உட்கார வைக்கத்தான் போகின்றது. அப்போது ஈழம் என்னும் தேசம் எழுந்து உட்காரத்தான் போகின்றது.
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழினஅழிப்புக் கொடுமைகளின் நேரடிச்சாட்சியங்களின் குரல்கள் பிரான்ஸ் நோர்மன்டிக் கோன் பல்கலைக்கழகத்தில் ஒலித்துள்ளது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 ... 79 80 81 அடுத்தபக்கம் >> |